முட்டை பிரியாணி,tamil samayal muttai, tamil samayal egg recipes

Loading...
Description:

முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்
Posted Image
பாசுமதி அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி
தாளிக்க – பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை

செய்முறை
* முட்டையை வேக வைத்து `கட்` செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கீறிக்கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் (தேவைப்படுபவர்கள் டால்டா சேர்க்கலாம்) ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

* பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்க்கவும்.

* இத்துடன் அரிசியையும் சேர்த்துக் கிளறவும். அரிசியைப்போல் ஒன்றரை மடங்கு நீர் ஊற்றவும். (சாதாரண பச்சரிசிக்கு இருமடங்கு நீர் ஊற்றவும்), அரிசி வெந்து வரும் சமயம் நறுக்கிய முட்டை துண்டுகளை மேலே சேர்த்து தம் கட்டி மூடிவிடவும். உப்பை சரி பார்த்து இறக்கவும்.

 

Post a Comment