கேரளாவில் ஜனவரி 22-ம் தேதி பாவனா – நவீன் திருமணம்

Loading...
Description:

நடிகை பாவனா திருமணம் ஜனவரி 22ம் தேதி கேரளாவில் நடைபெற உள்ளது.தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், அசல், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாள நடிகையான இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த நவீன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இம்மாதம் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 22ம் தேதி திருச்சூரில் பாவனா – நவீன் திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் பங்கேற்கின்றனர்.

Post a Comment