சம்பா கோதுமை ரவை பிரியாணி, briyani tamil tips

Loading...
Description:

1407826905mutoon-briyani

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை – 1கப்
காரட், முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, பீன்ஸ் கலந்தது – 1/2கப்
சின்ன வெங்காயம் – 1/4கப்
தக்காளி – 1/4கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
கறி மசாலாத் தூள் – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் நெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு சிவக்க வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்பு காய்கறிகளை சேர்க்கவும்… அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு தண்ணீர் வற்ற வதக்கவும்…பின்பு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்..

அதனுடன் கறிமசாலா தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் கோதுமை ரவையை சேர்த்து சில நிமிடம் கிளறவும்… அதனுடன் உப்பு, 2கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் மூடி வைக்கவும்.
1விசில் வந்தவுடன் திறக்கவும்…

Post a Comment