8 வாரத்தில் 2 இன்ச் தொப்பைக் குறைய 5 நிரூபிக்கப்பட்ட வழிகள்!

Loading...
Description:

tho

உடலின் மற்ற பகுதிகளை விட வயிற்று பகுதியில் வளரும் தொப்பையைக் குறைப்பதற்கு அதிகம் காலம் எடுக்கும்.

இங்கு சிறந்த 5 வழிமுறைகள் 8 வாரத்தில் 2 இன்ச் தொப்பையைக் குறைக்க கொடுக்கப்பட்டுள்ளது.

 

1.விறுவிறுப்பான நடைப்பயிற்சி :

தினமும் 20 நிமிட சுறுசுறுப்பான நடைபயிற்சியினால் 1 அங்குல வயிற்றுப்பகுதி கொழுப்பை 4 வாரத்தில் கறைக்க முடியும். ஆராய்ச்சிகள் தெரிவிப்பது என்னவென்றால், காலை 8 மணி முதல் நண்பகல் வரை உள்ள சூரிய ஒளியிலே மேற்கொள்ளும் நடைப்பயிற்சி காலை வேளையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியை விட பயனுள்ளதாக இருக்குமாம். ஏனெனில், இந்த காலை வெளிச்சம் உங்கள் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை(metabolic process) ஊக்குவித்து மேலும் கொழுப்பைக் குறைக்க வழிவகுக்கும்.

2.சமயலுக்கு தேங்காய் எண்ணெய் :

தினமும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மூலம் சமைப்பதினால் 2 இன்சை கனிதமாக குறைக்கலாம். தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (medium chain triglycerides – கொழுப்பு அமிலத்தின் ஒரு வகை) உள்ளது, இது இரத்த ஓட்டத்தின் போது நேரடியாக உறிஞ்சப்பட்டு கொழுப்புகளை வேகமாக செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் கொழுப்பை உடலில் சேகரிக்காமல் அதை ஆற்றலாக பயன்படுத்துவதால், நமது உடல் கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் இருக்கும்.

3.தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் சாப்பிடுங்கள்:

எத்தனையோ ஆராய்ச்சிகள், தூங்குவதற்கு சற்று முன் சாப்பிடுவதால், நமது தூக்கத்திற்கும் கொழுப்பை எரிக்கும் ஆற்றலுக்கும் இடையூறு செய்கிறது என்று தெரிவிக்கின்றன. இதனால், மெலாட்டின் ஹார்மோன்(வளர்ச்சிக்கு மற்றும் தூங்கி எழ சுரக்கும் ஹார்மோன்) உற்பத்தியை குறைத்து, உடல் சூட்டை அதிகரித்து இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இந்த காரணத்திற்காகவே, தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவதனால், வயிற்றின் அமிலங்கள் மற்றும் என்சைம்கள் உணவை ஆற்றலாக மாற்ற பெரிதும் உதவுகிறது.

4.அதிக புரதம் :

புரதத்தை உட்கொள்வதன் மூலம், 60% பசியை கட்டுபடுத்தி, 80-100 கலோரிகளைத் தந்து வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை(metabolic process) ஊக்குவித்து, ஒரு நாளைக்கு 441 கலோரிகள் எடுத்துக் கொள்வதை குறைக்கிறது. மாமிசப் புரதம் மற்றும் தாவர புரதம், இரண்டிலுமே தொப்பைக் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. உங்கள் வயிற்றுப்பகுதியின் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்பினால், குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள், மீன், கோழி , சோயாபீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

5.கோலைன்(Choline) அதிகமுள்ள உணவுகள்:

கோலைன் என்பது நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து, இது நமது மரபணுக்களின் மூலம் கொழுப்பு சேமிப்பதற்கு எதிராக செயல்படுகிறது. இது கொழுப்பை உடைத்து அதை ஆற்றலாக மாறி செயல்பட உதவுகிறது. சீமை பரட்டைக்கீரை, முட்டை, கடல் உணவுகள், மெலிந்த இறைச்சிகள் போன்றவற்றில் கோலைன் அபாரமாக தெண்படுகிறது.

Post a Comment