ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Loading...
Description:

chicken-biryani

தேவையானப் பொருட்கள
சிக்கனுடன் பிரட்டி வைக்க:
சிக்கன் – 1/2கிலோ
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
தயிர்- 1/2கப்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
பமிளகாய்- 5 (இரண்டாக நறுக்கி போடவும்)
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு- தேவைக்கு
பொடியாக நறுக்கிய புதினா, கொ.மல்லி – 2ஸ்பூன்
கரம் மசாலா:
ஷாஜீரா – 25கிராம்
பட்டை- 25கிராம்
ஏலக்காய்- 25கிராம்
மிக்ஸீயில் அரைத்து தேவைக்கு பயன்படுத்தவும்
பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ
ஷாஜிரா- 1ஸ்பூன்
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 4
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 4கரண்டி
பல்லாரி- 3
எலுமிச்சை- 1
கேசரி மஞ்சள் கலர்- 1சிட்டிகை

chicken-biryani

செய்முறை
அகல சட்டியில் சிக்கன்னுடன் பிரட்டி வைக்க கூடிய பொருட்களை எல்லாம் சேர்த்து விரவி 1மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஷாஜீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும் கொதி வரும் பொது அரிசியை சேர்க்கவும்.
அரிசி 1/2பாகம் வெந்தவுடன் வடிகட்டி உதிரியாக சாதத்தை எடுக்கவும்.

சிக்கன் பிரட்டி வைத்த அதே பாத்திரத்தில் சிக்கன் கலவைக்கு மேலே பொறித்த வெங்காயத்தை தூவவும். சுற்றி வரை பாதி எண்ணெய் ஊற்றவும். அதன் மேலே சாததைய் போடவும் மேலே மீதி பொறித்த வெங்காயம் எண்ணெய்யை சுற்றி வரை தூவவும்.
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
கேசரி கலர்வுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றாவும்.
எலுமிச்சை சாரை சுற்றிவரை பிழிந்து விடவும்

 

பிறகு நன்றாக இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் வைக்கவும்.
ஆவி வெளி வரும் பொது குறைந்த தணலில் 15நிமிடம் வைத்து இறக்கவும்.
மூடிக்கு மேலே எதாவது கனமான பொருளை வைத்தால் ஆவி அதிகம் வெளி போகாமல் தம்மில் இருக்கும்

Post a Comment