ஹைதராபாத் ஆட்டு இறச்சி பிரியாணி

Loading...
Description:

hy

தேவையான பொருட்கள்

அரிசியை வேக வைக்க

பாஸ்மதி அரிசி – 1 கிலோ

உப்பு – 2 மேஜைக்கரண்டி

இறச்சியை வேக வைக்க

ஆட்டுக்கறி – 1 கிலோ

உப்பு – 1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூளுக்கு

பட்டை – 1 துண்டு

ஜாதிப்பத்திரி – 4 துண்டுகள்

முழு மல்லி – 2 மேஜைக்கரண்டி

நட்சத்திர சோம்பு – 2

கிராம்பு – 6

ஜீரகம் – 2 தேக்கரண்டி

மசாலாவுக்கு

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

நெய் – 4 மேஜைக்கரண்டி

வெங்காயம் – 3 (பெரியது)

இஞ்சி பூண்டு விழுது – 3 மேஜைக்கரண்டி

பிரியாணி இலை – 1

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – தேவைக்கு

ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 6

தக்காளி – 5 (பெரியது)

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க

வெங்காயம் – 1(பெரியது)

முந்திரி பருப்பு – 1/2 கப்

உலர் திராட்சை – 1/2 கப்

மல்லித் தளை – 1 கப்

புதினா – 1 கப்

குங்குமப் பூ – 1/2 கப் பாலில் ஊற வைத்தது

நெய் – 2 மேஜைக்கரண்டி

 

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

படி – 1: கரம் மசாலா தூள் செய்ய

மசாலா தூள் செய்ய தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்

இவற்றை ஒரு காய்ந்த கடாயில் போட்டு குறைவான தீயில் வறுத்துக் கொள்ளவும்

பின்பு அவற்றை மிக்கசியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

படி – 2: இறச்சியை வேக வைக்க

ஆட்டிறச்சியை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

இறச்சி ரெடி

படி – 3: அரிசியை வேக வைக்க

ஒரு பாத்திரத்தில் அதிக அளவு நீர் சேர்த்து அதில் அரிசியை போட்டு வேக வைக்கவும்

அரிசி முக்கால் வாசி வெந்ததும் இறக்கி விடவும்

படி – 4: அலங்கரிக்க

முதலில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்

பின்பு அதே எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு பொரித்தெடுக்கவும்

படி – 5: மசாலா செய்ய

பின்பு அதே எண்ணெயில் நெய் சேர்க்கவும்]

பின்பு அதனுடன் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொரித்தெடுக்கவும்

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பின்பு பிரியாணி இலை சேர்க்கவும்

பின்பு மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

பின்பு மூடி வைத்து வேக வைக்கவும்

அவை நன்கு மசிந்ததும் அதனை வேறொரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்

பின்பு அதனுடன் தயிர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

அதனுடன் இறச்சியை வேக வைத்த நீருடன் சேர்த்து விடவும்

பின்பு தீயை அதிகரித்து மசாலா சிறிது குறையும் வரை வேக வைக்கவும்

பின்பு பாதி மசாலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

மீதமுள்ள மசாலாவுடன் பாதியளவு வேக வைத்தஅரிசியை சேர்க்கவும்

பின்பு அதன் மேல் பாதி மல்லித்தளை மறறும் புதினா சேர்க்கவும்

அதன்மேல் பாதியளவு பொரித்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

பின்பு பாதியளவு வெங்காயம் சேர்க்கவும்

பின்பு பாதியளவு குங்குமப் பூ கலந்த பால் சோக்கவும்

பின்பு அதன் மேல் மீதமுள்ள மசாலா சேர்க்கவும்

பின்பு மீதமுள்ள வேக வைத்த அரிசியை சேர்க்கவும்

பின்பு அதன் மேல் மீதமுள்ள மல்லித்தளை மறறும் புதினா சேர்க்கவும்

அதன்மேல் மீதமுள்ள பொரித்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

பின்பு மீதமுள்ள வெங்காயம் சேர்க்கவும்
மீதமுள்ள குங்குமப் பூ கலந்த பால் சோக்கவும்

பின்பு அதன் மேல் நெய் சேர்க்கவும்

பின்பு அதனை மூடி குறைந்ந தீயில் வேக வைக்கவும்

வெந்ததும் அவற்றை நன்கு கிளறவும்

ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரெடி

Post a Comment