ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா

Loading...
Description:

index

என்னென்ன தேவை?

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்.

எப்படிச் செய்வது?

அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். ஆரம்பத்திலிருந்தே தீ மிதமாக இருக்க வேண்டியது அவசியம். பால் நன்கு சுண்டி கெட்டிப்பட ஆரம்பிக்கும் போது தீயை இன்னும் குறைத்து விடவும். சுற்றிலும் படியும் பால் ஆடைகளை வழித்து பாலிலேயே போடவும். லேசான மஞ்சள் நிறத்தில் நல்ல வாசனை வரும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கி, வேறு பாத்திரத்தில்  மாற்றிவிடவும்.

உங்கள் கவனத்துக்கு…

பால் அதிக கெட்டியாகவோ, அதிக தண்ணீராகவோ இருக்கக் கூடாது. சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்தும்  செய்யலாம். கைவிடாமல் கிளறுவது மிக முக்கியம்.  இல்லாவிட்டால் பால் அடிப்பிடிப்பதோடு, சுவையும் மணமும் மாறிவிடும். சற்று தளர்ந்த நிலையில் பால்கோவாவை அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும். ஆறியதும் இன்னும் இறுகும் என்பதால் அடுப்பிலேயே இறுக விட்டால் மிக கெட்டியாக ஆகிவிடும்.

Post a Comment