ஸ்ரீதேவியின் மாரடைப்பிற்கான காரணம் இதுவா? பெண்களை அதிரவைத்த ஆய்வு!

Loading...
Description:

நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தமைகுறித்து செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரது மாரடைப்பு குறித்து புதிய ஆய்வு ஒன்றுடன் சர்வதேச ஊடகம் ஒன்று ஒப்பீடு செய்துள்ளது.

அந்த ஆய்வு அதிர்ச்சி மிக்கதாக அமைந்துள்ளதாக மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது. அதாவது, சமீபத்தில் 54 வயதான பெண்கள் மாரடைப்பால் இறப்பது உலகளவில் அதிகரித்துக் காணப்படுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. அவ்வாறான பெண்களின் வரிசையிலேயே தற்போது ஸ்ரீதேவி இடம்பிடித்திருக்கிறார்.

சமீபத்திய ஆய்வுப்படி மாரடைப்பு அபாயமுள்ள பெண்கள் முதலாவது மாரடைப்புடனே மரணமாவது தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுத் தகவலை டெய்லி மெயில் ஊடகம் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள் தமது உடல்குறித்தும் அதற்கான மருத்துவ ரீதியிலான அணுகுமுறைகள் குறித்தும் ஆர்வப்படாமல் இருப்பதே இதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக இருதய நோய்கள் துறையின் பேராசிரிட்யர் ’கிறிஸ் கேல்’ இந்த தகவலை கூறியிருக்கிறார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், “இதய நோய்களானவை குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே பாதிக்கும் என உணரவேண்டும்” எனக் கூறியுள்ளார். அதாவது இதய நோய் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் தாமாகவே தம்மை உணர்ந்துகொள்லலாம் என கூறியுள்ளார். இதற்கு கூறப்பட்ட விளக்கம்தான் தமது உடல் ரீதியான கவனிப்பு இன்மை.

மாரடைப்பால் பாதிக்கப்படும் அபாயமுள்ள பெண்களுக்கு தசைகளில் மேற்கொள்ளப்படும் பைபாஸ் அறுவைச் சிகிச்சைகள்மூலம் சிக்கிச்சையளிக்கமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாரடைப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகமாக ஏற்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முக்கியமாக அதிகம் வியர்க்கத்தக்க வகையில் அவர்களது செயற்பாடு அமையவேண்டும் என்றார். உடல் ரீதியாக அதிகம் உழைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை பெண்களுக்கு அவசியம் வழங்கப்படவேண்டும் எனவும் கிறிஸ் கேல் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை 41வீதமானோருக்கு மாரடைப்பு வரக்கூடிய அபாய நிலை காணப்படுவதற்கு அவர்களிடமுள்ள அசாதாரண கொழுப்பு நிலைமையே காரணம் என இன்னொரு ஆய்வு கூறீருக்கிறது. சீதோஷ்ண வாழ்க்கை, உட்கொண்ட கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை முக்கிய பங்களிப்பு காரணிகளாக உள்ளமையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

இந்த நிலையிலேயே ஸ்ரீதேவியின் மாரடைப்பு குறித்த பார்வையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் அவரது மாரடைப்பிற்கான மிகச் சரியான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment