ஸில்க் புட்டு.tamil samayal

Loading...
Description:
 • india tamilராகி – 200கிராம்
 • வேர்க்கடலை – 100 கிராம்
 • பொட்டுக்கடலை – 100 கிராம்
 • தேங்காய்( துருவியது) – ஒருமூடி
 • வெல்லம் – 150கிராம்
 • ஏலக்காய் – 5

 

 • ராகி, பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்துவறுக்கவும்.
 • வேர்க்கடலையும் சிவக்கவறுத்து தோல் நீக்கவும்.
 • இவைகளை மிக்சியில் ரவைபோல கர,கரப்பாகப்பொடிக்கவும்.
 • இந்தபொடியில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் தெளித்து பிசிறி, ஒருவெள்ளைத்துணியில் சுற்றி ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
 • வேகவைத்தமாவை ஒருதட்டில் கொட்டி நன்கு ஆற விடவும்.
 • வெல்லத்தில் ஒருடம்ளர் தண்ணீரூற்றி கரையவிட்டு கல், மண் போக வடிகட்டிக்கொள்ளவும்.
 • ஒருகடாயில் வெல்லத்தண்ணிர் ஊற்றி கெட்டி கம்பி பாகு பதத்தில் காய்ச்சவும்.
 • செய்துவைத்திருக்கும் மாவில் வெல்லப்பாகைவிட்டு கை விடாமல் ஒன்றுபோல கிளறவும்
 • ஏலத்தைப்பொடித்து சேர்க்கவும்.துருவிய தேங்காயயும் சேர்த்து நன்றாக கிளறி உதிர், உதிரானதும் வேறுபாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்..
மிகவும் சத்தான ,ருசியான சிற்றுண்டி இது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Post a Comment