வேலூர் மட்டன் ப்ரை

Loading...
Description:

15095103_1148921138488274_8625863421062426198_n


நான் திருப்பத்தூரில் வேலூர் ரோட்டில் உள்ள ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு உணவகம்.

குறிப்பு இரும்பு வடச்சட்டியை பயன்படுத்தவும். அப்போது தான் அசல் சுவை கிடைக்கும். இல்லாவிட்டால் நீங்கள் மண் வடச்சட்டியையும் பயன்படுத்தலாம். சுவை மேம்படும்.

தேவையான பொருட்கள்
மட்டன் 1 கிலோ
உப்புத்தூள் தேவையான அளவு
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
தேங்காய் அரைத்த விழுது 1 மேஜைக்கரண்டி
கசகசா 1 மேஜைக்கரண்டி
எங்கள் மரசெக்கு கடலெண்ணய் 6
மேஜைக்கரண்டி
பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
இலவங்கம் 12
பட்டை 2 இஞ்ச்
ஏலக்காய் 1
கொத்தமல்லி இலைகள் 1/2 கட்டு ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 15 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 100 மில்லி

செய்முறை
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு சிறுதீயில் வாசனை வரும் வரை வதக்கவும்.

2. பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய்யை மற்றும் மிக்ஸியில் பொடித்த பொடியை தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக எடுத்து கொண்டு 3 விசில் விட்டுகோங்க.

4. குக்கரில் பிரஷர் அடங்கும் வரை பொறுமை காக்கவும். அதன் பிறகு நன்றாக வதக்கவும் தண்ணீர் முழுவதும் வற்றும் வரை.

5. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் மரசெக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் பிரஷர் குக்கரில் உள்ள வேகவைத்த மட்டன் கலவையை வடச்சட்டியில் போட்டு நன்றாக 20 நிமிடங்கள் வரை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

6. அதில் மிக்ஸியில் பொடித்த பொடியை மட்டன் கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும். இடை இடையில் பசு வெண்ணையை ஊற்றி வதக்கவும்.

7. இப்பொழுது அதில் பொடித்த கொத்தமல்லி இலைகள் தாவி நன்றாக பிரட்டவும்

Post a Comment