வெள்ளையப்பம்

Loading...
Description:

வெள்ளையப்பம்

தேவையான பொருட்கள்

வறுத்து அரித்த வெள்ளையரிசிமா 1 சுண்டு
பெரிய தேங்காய் 1
இளநீர் 1 தம்ளர்
ஈஸ்ற் 1 தே.க
சீனி 1 தே.க
சுடுநீர் 2 மே.க
உப்புநீர் அளவிற்கு
தேங்காய் எண்ணெய் 2 மே. க

செய்முறை
பாத்திரத்தில் ஈஸ்டையும் சீனியையும் இட்டு , 2 மேசைக்கரண்டி சுடுநீர் விட்டு மூடி கொதிப்பதர்காக 1/2 மணி நேரம் வரை வைத்து கொள்க . அல்லது இக் கலவைக்கு பதிலாக கள்ளை பாவிக்கலாம் .
வெள்ளரிசிமாவை நான்கு முறை நன்றாக அரித்து கொள்க
அரித்த மாவை பாத்திரத்தி போட்டு , ஈஸ்ட் கரைசல் அல்லது கள்ளு , இளநீர் என்பவற்றை விட்டு நன்கு சேர்த்துகொண்ட பின் , அளவாகத் தண்ணீர் விட்டு இடியப்பமா பதத்திற்கு(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) அடித்து குழைத்து கொண்டு ஓரளவான உருண்டைகளாக உருட்டி பாத்திரத்திலிட்டு மூடி 12 மணி நேரம் வரை புளிக்க வைத்து கொள்க .
பின்பு தேங்காயை துருவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு புழிந்து 3 தம்ளர் பாலை எடுத்துகொள்க .

பின்பு புளிக்க வைத்துள்ள மா உருண்டைகள் வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து அதனுள் தேங்காய் பாலை சிறிது சிறிதாக விட்டு அளவிற்கு உப்புநீரும் சேர்த்து ஓரளவு நீர் பதமாக கரைத்து வைத்து கொள்க .
அப்பம் சுடுவதற்கு சிறிய தாச்சியை அடுப்பில் வைத்து ()எண்ணெய் பூசிக்கொண்டபின் 1 கரண்டியளவு மாவை ஊத்தி தாச்சியை தூக்கி ஒருமுறை சுற்றி கொண்டபின் ஒரு மூடியால் சிறிது நேரம் வைத்து வெந்த பின்பு பரிமாறலாம்

Post a Comment