வெள்ளாட்டு குடல் குழம்பு ,tamil new samayal

Loading...
Description:

எங்கள் அத்தை வீட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு புதன் கிழமை அன்று வெள்ளாட்டு கிடா குட்டி வெட்டப்பட்டது.

எனக்கு அழைப்பு இருந்ததால் காலையிலே சென்று விட்டேன்.

எனது அத்தை மகனும் , நானும் சேர்ந்து குடல் கறியை எனது ஆத்தா கைபக்குவத்தில் செய்து அசத்தினோம்.

இந்த குடலை சமைத்து விருந்துக்கு வந்திருந்தவர்களின் சாப்பிட்ட வாழை இலையில் வைத்து அனைவரின் பாராட்டுகளை பெற்று விட்டோம்.

மழைக்கும் குளிருக்கும் குழம்பு சுருக்கென்று இருந்தது. இதை சுடு சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

தயிர் சாதத்துடன் சரியான பக்க உணவாக திகழ்ந்தது என அனைவரின் பாராட்டாகும்.

தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு குடல் ஒரு செட் ( பொடியாக நறுக்கியது) ( 1 கிலோ )
வெள்ளாட்டு சுத்து கொழுப்பு 1 செட் ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 24 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பச்சை மிளகாய் 2 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தேங்காய் பால் 3 கப்
கறிவேப்பில்ல கொஞ்சமாக
மரசெக்கு கடலெண்ணய் 5 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
குரு மிளகு 6 மேஜைக்கரண்டி
சீரகம் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி விதை 3 மேஜைக்கரண்டி
பட்டை 2 இன்ச்
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1
முழு முந்திரி பருப்பு 18
தேங்காய் பால் 1 கப்
கசாகசா 1/2 தேக்கரண்டி

தாளிக்க

மரசெக்கு தேங்காய் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
வரமிளகாய் 4
கறிவேப்பில்ல கொஞ்சமாக

செய்முறை

1. குடல் கறியை நன்றாக சுத்தமாக இரண்டு அல்லது மூன்று தடவை கழுவி கொள்ள வேண்டும்.

2. சூர வாடை போவதற்கு சுடு தண்ணீரில் போட்டு நன்றாக தேய்த்து சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்.

3. அதற்கு பிறகு மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்துகோங்க அதில் சிறிது கூட தண்ணீர் விடாமல் தேங்காய் பாலை விட்டு நன்றாக நைசாக விழுதாக மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க அதனுடன் வெள்ளாட்டு சுத்து கொழுப்பை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

4. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பின்பு அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

7. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெள்ளாட்டு குடலை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். துளிகூட தண்ணீர் ஊற்றகூடாது தேவைக்கேற்ப மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி கொள்ளலாம்.

8. அதில் வரமிளகாய் தூள் , மஞ்சள் தூள் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

9. அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும் , அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

10. இத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மறந்தும் துளிகூட தண்ணீர் சேர்க்க கூடாது .

11. தேவையெனில் எஸ்ட்ரா எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை எடுத்து ஊற்றி பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக 10 விசில் வரை விட்டுகோங்க. சிறிது நேரம் சிறுதீயில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

12. பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் பிரஷர் குக்கரை திறந்து குடல் கறி வெந்துவிடதா என்று உறுதிபடுத்திய பின்னர் , உப்பு மற்றும் காரத்தை சரிபார்த்த பின்னர்

13. ஒரு மண்வடச்சட்டியில் மரசெக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.

14. அதில் கிள்ளிய வரமிளகாய் மற்றும் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்கி பிரஷர் குக்கரில் உள்ள வெள்ளாட்டு குடல் கறியில் சேர்க்கப்பட்டது.

15. இப்பொழுது இதை சுடு சாதத்துடன் பரிமாறவும்.

Post a Comment