வெந்தயகீரை – தர்பூசணி சாலட்

Loading...
Description:

வெந்தயகீரை -  தர்பூசணி சாலட்
தேவையான பொருட்கள் :

வெந்தயகீரை – 1 கட்டு
கொண்டைக்கடலை – 1 கப்
தர்பூசணி – பாதி
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – கால் ஸ்பூன்

செய்முறை..

• வெந்தயகீரையை சுத்தம் செய்து கொள்ளவும்

• கொண்டை கடலையை வேக வைத்துக் கொள்ளவும்

• தர்பூசணியை துண்டுகளாக வெட்டவும்

• ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

•வேறு ஒரு பாத்திரத்தில் வெந்தயகீரை, வேக வைத்த கொண்டைகடலை கலந்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக தர்பூசணி துண்டுகளை போட்டு கலக்கவும்.

• சுவையான, சத்தான வெந்தயகீரை –  தர்பூசணி சாலட் சாலட் ரெடி

Post a Comment