வெண்டைக்காய் சூப்

Loading...
Description:

வெண்டைக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

 • வெண்டைக்காய் -6 பொடியாக நறுக்கியது
 • பெரிய வெங்காயம் -1, நறுக்கியது
 • தக்காளி -1 நறுக்கியது
 • பருப்பு வேக வைத்த தண்ணீர் -2 கப்
 • பச்சை மிளகாய்- 2
 • எலுமிச்சை சாறு
 • கொத்தமல்லித் தழை
 • உப்பு

தேவையான பொருட்கள்:

 • வெண்டைக்காய்களை நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம்  தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

 

 • இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டு வெட்டிப் போடவும். சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
 • இறக்கும் போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து இறக்கவும். குளிருக்கு குடிப்பதற்கு இதமாக இருக்கும்.

Post a Comment