வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் tamil samayal

Loading...
Description:
 tamil samayal rolls
செய்முறை
 
மைதா மாவிற்கு பதில் நான் இங்கு (மல்டி க்ரெயின்) கோதுமை மாவு உபயோகித்து உள்ளேன்.
 
1 கப் மாவுடன் உப்பு, சிறிது நெய் சேர்த்து பிசறி, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
 

 

 
 
மாவு ஊறும் சமயத்தில்
 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,  1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காய தாளிள் வெங்காயம் , கேரட், கோஸ் தலா 1/4 கப் சேர்த்து லேசாக வதக்கி, உப்பு , சோயாசாஸ் (1 ஸ்பூன் ) வெங்காய தாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.


பின் பூரிக்கு போல் மாவை சிறியதாக உருட்டி, மெலிதாக திரட்டவும்.

 

 

 

 

 

 

 
மேலே படங்களில் உள்ளது போல் திரட்டிய மாவில், சீஸை வைத்து, காயை வைத்து, இரு புறமும் மடக்கி , பின் உருட்டி, தண்ணீரை தொட்டு, முனையை ஒட்டவும்.
பின் மிதமான காய்ச்சலில், எண்ணெயில்  பொறுமையாக மொறுமொறுப்பாக பொறித்தெடுத்து, சாஸ் உடன் பறிமாறவும்.

 

 

 

Post a Comment