வெஜிடபிள் பீட்ஸா(Veggie Pizza)

Loading...
Description:

வெஜிடபிள் பீட்ஸா(Veggie Pizza)

தேவையானவை

 

பீட்ஸா பேஸ் செய்ய:

 

மைதா மாவு – 4 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
ட்ரை ஈஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
 

 

டாப்பிங்க்கு:
பீட்ஸா சாஸ்
மாஸரெல்லா சீஸ் – 1 பாக்கெட்
குடமிளகாய்
ஆலிவ்
ஹாலப்பினோ பெப்பர்
மஷ்ரூம்
வேற ஏதாவது காய் வேணும்னாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

 

செய்முறை
  • வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, உப்பு , ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
  • அதில் மைதா மாவு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு தளர்வாக இருக்க வேண்டும். 4 கப் மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
  • மாவு இருக்கும் பாத்திரத்தை clear wrap கொண்டு மூடி வைக்கவும்.
  • 2 மணி நேரத்தில் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.
  • அதை மறுபடியும் நன்றாக பிசைந்து, இரண்டாகப்பிரிக்கவும்.
  • ஒரு பகுதியை பிசைந்து சப்பாத்தி கட்டையில் பெரிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  • இது thin crust pizza. க்ரஸ்ட் திக்காக வேண்டுமென்றால் மாவும் திக்காக தேய்க்க வேண்டும்.
  • பீட்ஸா பானில்(pan) தேய்த்த மாவை வைத்து ஒரங்களை கையால் அழுத்தி விடவும்..

 

 • பீட்ஸா சாஸை தடவி அதன் மேல் வேண்டிய டாப்பிங்கை அடுக்கி, அதன்மேல் சீஸ் தூவி விடவும்.
 • 400 டிகிரி ஃபாரஹீட்டில் முற்சூடு செய்த அவனில் 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்யவும்.

 

இந்த அளவுக்கு 2 பீட்ஸா செய்யலாம். ஒரு வெஜ்ஜி பீட்ஸாவும் 1 ஆலிவ் பீட்ஸாவும் செய்தோம்

Post a Comment