வெங்காய சட்னி tamil samayal

Loading...
Description:

tamil ooதேவையான பொருட்கள் :

அரைக்க:

வெங்காயம் – 2
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு- 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தாளிக்க

செய்முறை :

வெங்காயத்தை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போக வேண்டும்.

நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வெங்காய சட்னி தயார்.

இது இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்

Post a Comment