வெங்காய கொடமிளகாய் பிஸ்ஸா பிரெட் டோஸ்ட்- Onion capsicum pizza bread

Loading...
Description:
சைவ பிரியர்களுக்கு ஏற்ற அருமையான வெங்காய கொட மிளகாய் பிட்சா பிரெட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலை உணவு.

tamil samayal be

இட்லி தோசைய பார்த்து முகம் சுழிக்கும் பிள்ளைகளுக்கு இத கொடுத்து பாருஙக்ள். கப் சிப்புன்னு எத்தனை உள்ளே போகுதுன்னு…

அசைவம் விரும்புவோர் இத செய்து சாப்பிடுங்கள் இதிலேயே சைவம் விரும்புவோர் சிக்கனுக்கு பதில் பனீர் மஷ்ரூம் சேர்த்துக்கங்க
ஸ்மால் பிரெட் – ஒரு பாக்கெட் (10 ஸ்லைஸ்கள்)

பிட்சா சாஸ் – ஐந்து தேக்கரண்டி

மொஜெரெல்லா சீஸ் – ஐந்து மேசைகரண்டி

கருப்பு ஆலிவ் காய் – ஐந்து

டெமோட்டோ கெட்சப் – ஐந்து தேக்கரண்டி

பட்டர் – பத்து தேக்கரண்டி

வெங்காயம் – இரண்டு

கொடமிளகாய் – ஒன்று

உப்பு – கால் தேக்கரண்டி

பட்டர் + எண்ணை – இரண்டு தேக்கரண்டி

செய்முறை

1.வெங்காயம், குடை மிளகாயை பொடியாக அரிந்து அதில் உப்பு தூவி பட்டர் + எண்ணை இரண்டு தேக்கரண்டி ஊற்றி வதக்கி கொள்ள வேண்டும்.

2.எல்லா பிரெட்களிலும் படரை லேசாக தடவி கருகாமல் பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

4. முதலில் பத்து ஸலைஸ் பிரெட்டில் ஐந்து எடுத்து அதில்  பிட்சா சாஸை பரவலாக தடவவும்.

5.அடுத்து வதக்கிய வெங்காய, குடை மிளகாய் கலவை மற்றும் ஆலிவ் காயை பொடியாக நருக்கி பிரெட்டில் கொள்ளும் அளவிற்கு தூவவும்.

6.பிறகு மொஜெரெல்லா சீஸை தூவவும். கொஞ்சம் அதிகமாக தூவினால் நல்ல ஒன்றோடொன்று நல்ல ஜாமாகும் சாப்பிடும் போது நல்ல இருக்கும்.

7. கடைசியாக டொமேட்டோ கெட்சப்பை தெளித்து விட வேண்டும்.

8. எல்லா கலவையையும் வைத்திருக்கும் பிரெட்டின் மேல் . மற்றொரு பொரித்த பிரெட்டை வைத்து அழுத்த வேண்டும்.

9.மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்

10.சுவையான யம்மி யம்மி பிட்சா பிரெட் ரெடி.
குறிப்பு

**************

இதை பிரெட், ஸ்மால் பன், லாங் பன், ரவுண்டு பன் , தோசை எல்லா வற்றிலும் செய்யலாம். பிரெட் மில்க் பிரெட் என்றால் இன்னும் சுவை கூடும். பிரெட்டை பொரிக்கமலும் செய்யலாம். குழந்தைகளுக்காக கிர்ஸ்பியாக இருக்கனும் ஆகையால் பட்டரில் பொரித்துள்ளேன். இது நானே டிரை பண்ண ரெஸிபி இது போல எல்லா வகையான காய்களையும் பைனாக சாப் செய்து இந்த மாதிரி செய்யலாம்

Post a Comment