வெங்காய காரச் சட்னி/v

Loading...
Description:

1453652435hakkali thokku

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
காங்ந்த மிளகாய்  – 4
பூண்டு – 2 பல்
புளி  – சிறிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் –  1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி சூடானதும்   காய்ந்த மிளகாய்போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில்  2  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி  பூண்டு  சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆற விடவும்.  ஆறிய பிறகு அதனுடன்  காய்ந்த மிளகாய்  புளி  உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

பின்பு மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி  எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து  அரைத்த சட்னியை கொட்டி கிளரி இறக்கவும்.சுவையான காரச்சட்னி ரெடி

Post a Comment