வெங்காயம், தக்காளி சட்னி,samayal tips tamil,

Loading...
Description:

வெங்காயம், தக்காளி சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் 15, புளி 2 சுளை, உப்பு தேவைக்கேற்ப, தக்காளி 5, சின்ன வெங்காயம் 20, பூண்டு 4 பல், எண்ணெய் கால் கப், கடுகு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து கரகரப்பாக (நைஸாக அரைப்பதற்கும் சற்று முன்னதாக), பொடி செய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின் 2 டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு தக்காளி + புளியை தண்ணீர் சத்தில்லாமல் வதக்கவும். மிக்ஸியில் இதை விழுதாக அடித்துக்கொள்ளவும் (இதுதான் தக்காளி ப்யூரி). பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம் + பூண்டை போட்டு வதக்கவும். அத்துடன் பொடித்த மிளகாய் பொடியை தூவி கிளறி, தக்காளி ப்யூரியை ஊற்றி, உப்பு + கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சட்னி சிறிது கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கி பரிமாறவும். இட்லிக்கு எடுப்பான ஜோடி இந்த சட்னி

Post a Comment