விளாம்பழ ஜூஸ்

Loading...
Description:

be458fe1-117b-4a14-8a97-92b11a4a84f0_S_secvpf.gif

தேவையான பொருட்கள் :

விளாம்பழம்- 2
வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கருப்பு உப்பு – 1 ஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
ஐஸ் தண்ணீர் – 4 கப்
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு

செய்முறை :

• விளாம்பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• வெல்லத்தை 1 கப் குளிர்ந்த நீர் விட்டு நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

• இந்த வெல்லக்கரைசலை விளாம்பழ விழுதில் ஊற்றி நன்றாக கலந்து வடிகட்டவும்.

• மீதமுள்ள தண்ணீர், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• கலந்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

Post a Comment