விளக்கெண்ணெய் பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க சில வழிகள்!!

Loading...
Description:
29-stretchவிளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு சாற்றில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைவதைக் காணலாம்.

சூடான விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் உள்ளன. எனவே சிறிது விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மீது தடவி 30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சரிசம அளவில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை எடுத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, பின் அவ்விடமானது சூடேறும் வரை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் எண்ணெயானது ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளை வெளியேற்றி, சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்து, சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், சில வாரங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைந்திருப்பதைக் காணலாம். Show Thumbnail

விளக்கெண்ணெய் மற்றும் கிராம்பு கிராம்பை அரைத்து, அதனை விளக்கெண்ணெயில் சேர்த்து, சிறிது சூடேற்றி, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறையும்.

கற்றாழை மற்றும் விளக்கெண்ணெய் கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனை நன்கு நீர் போன்று அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் விளக்கெண்ணெய் சேர்த்து சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் சற்று சூடாக இருக்கும் போதே தடவ வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலியிக் அமிலம், பாதிக்கப்பட்ட கொலாஜனை சரிசெய்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும். Show Thumbnail

Post a Comment