வியர்வையை விரட்டுவது எப்படி

Loading...
Description:

Sweating-dryness-auburn-clear-herbal-powder

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகவும் ஆகிவிடும். பஸ்ஸிலோ, டூ வீலரிலோ போகும் போது புழுதி படுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும்.

தலையை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கு நல்ல தீர்வு. வாரம் இருமுறையாவது நான் சொல்கிற முறையில் தலையை அலசி வந்தாலே, எல்லாப் பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

செம்பருத்தி இலை – 10,
கொட்டை நீக்கிய புங்க தோல் – 3 எடுத்து,

இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள், வாரம் ஒரு நாள் இதைத் தலை முழுவதும் பூசி, நன்றாகத் தேய்த்து அலசுங்கள். புங்க தோல், தலையில் உள்ள அழுக்கை நீக்கும். செம்பருத்தி, கூந்தலை மிருதுவாக்கும்.

சீயக்காய் – கால் கிலோ,
பயத்தம் பருப்பு – 200 கிராம்,
பூலான்கிழங்கு – 100 கிராம்,
சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் – 10 கிராம்…

இந்த நான்கையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு இந்தப் பவுடரை பயன்படுத்துங்கள். இதனால் முடி கொட்டாமல், செழிப்பாக வளரும். வாசனையுடனும் இருக்கும். பேன் தொல்லை இருந்தால் இந்த பவுடருன், துளசி பவுடர், சுட் வசம்புத்தூள் – தலா 1 டீஸ்புன் சேர்த்துக் கொள்ளுங்கள். பேனோ, பொடுகோ கிட்டவே நெருங்காது.

Post a Comment