வால்நட் கிரீம் பை tamil samayal

Loading...
Description:

Walnut cream pieவால்நட் கிரீம் பை தேவையான பொருட்கள்

மைதா                                        – 250 கிராம்
ஐஸிங் சுகர்                             – 125 கிராம்
வெண்ணெய்                          – 125 கிராம்
வெனிலா எசன்ஸ்               – 1 டீஸ்பூன்
முட்டை                                    – 2
வால்நட் கிரீம் செய்ய
வால்நட்                                     – 250 கிராம்
சீனி                                               – 300 கிராம்
டபுள் கிரீம்                                – 250 கிராம்
வெண்ணெய்                           – 20 கிராம்

 

வால்நட் கிரீம் பை செய்முறை

ஒரு pan- ல் 20 கிராம் வெண்ணெய் சூடாக்கி அதில் சீனியை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பின் வால்நட், டபுள் கிரீம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இதுவே வால்நட் கிரீம் ஆகும். சல்லடையில் மைதாமாவையும் ஐஸிங் சுகரையும் சலித்துக் கலந்து கொள்ளவும். முட்டையை நன்கு அடித்து கொள்ளவும். முட்டை, மைதா, ஐஸிங் சுகர் கலவை, வெண்ணெய், சிறிது தண்ணீர், வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு போலப் பிசையவும். பின்னர் இந்த மாவை ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும். பின் இந்த மாவை வெளியே எடுத்து இரு சம பாகமாகப் பிரித்து, சப்பாத்திக் கல்லில் ஒன்றை வைத்து பூரி அளவுக்கு திக்காக தேய்த்து, வட்ட வடிவமான பேக்கிங் ப்ளேட்டில் வைத்து அதன் மேல் வால்நட் கிரீமை வைத்து பின் மீதியுள்ள மாவை அதே அளவுக்கு தேய்த்து அந்த கிரீமின் மேல் வைத்து மூடி, அவனில் 160 – டிகிரியில் 25 முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும். சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறவும்

Post a Comment