வாரம் ஒருமுறை தலைக்கு சீகைக்காய் போட்டு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Loading...
Description:

hair

பழங்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க சீகைக்காய் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக நிறைந்துள்ளன.

 

சீகைக்காயில் நிறைந்துள்ள ஓர் பொருள் மயிர் கால்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. சீகைக்காயில் இன்னும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு அந்த சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

அதிலும் வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும். சரி, இப்போது சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நரைமுடி தடுக்கப்படும்

சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

 

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.

தலைமுடி உதிர்வது குறையும்

சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.

முடி வலிமையடையும்

சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

காயங்களை குணப்படுத்தும்

ஸ்கால்ப்பில் சிறு வெட்டுக்காயங்கள் இருப்பின் அதனை சீகைக்காய் குணப்படுத்தும். அதற்கு சீகைக்காய் பொடியை நீர் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் காயங்கள் குணமாவதோடு, அரிப்புக்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

 

 

 

 

 

 

 

source onlytamil

Post a Comment