வயிற்றுக்கான யோகாசனம்

Loading...
Description:

85399060-77db-4fe8-bd92-577ce1b3141a_S_secvpf5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். “யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.”

ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.

யோகாசனம்= யோகம் +ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன.

பல யோகசனக்கள் உண்டு. அதில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வயிற்றுக்கான யோகாசனம் பற்றி இன்று பார்ப்போம்.

  • முதலில் முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.
  • முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே
    பார்க்கவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 4 முதல் 5 முறை மாறி மாறி முடிந்தவரை செய்து பின் தளர்த்தவும். நாளடைவில் படிப்படியாக அதிக முறை செய்யவும்.

பயன்கள் :-

இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டும். நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.

ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Post a Comment