வஞ்சிரம் மீன் வறுவல்

Loading...
Description:

தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் 6
மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

மசாலா அரைக்க
பூண்டு பற்கள் 10
இஞ்சி 1 இன்ச்
வரமிளகாய் 6
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 8
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
தக்காளி 1
முட்டை 2
உப்பு தேவையான அளவு

செய்முறை
1. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக துளிகூட தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.

2. இந்த மசாலா கலவையை மசாலா மீன் துண்டுகளோடு கலந்து நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

3. பிறகு தோசை கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மீன் துண்டுகளை வைத்து சிறுதீயில் வேக விடவும்.

4. மறுபடியும் மீன் துண்டங்களை திருப்பி போட்டு மறுபடியும் ஓரங்களில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி மீன் துண்டங்களை வேக வைக்கவும்.

5. பிறகு முறுகலாக ஆனதும் எடுத்து சூடாக பரிமாறவும்.

Post a Comment