ரிச் வெனிலா ஐஸ்கிரீம் வித் கேரமல் சாஸ் tamil samayal

Loading...
Description:

rich vanilla icecream wit caramel sauceரிச்வெனிலாஐஸ்கிரீம்வித்கேரமல்சாஸ்தேவையான பொருட்கள்

பால்                                          – 1 கப்
கன்டன்ஸ்டு மில்க்            – 1/2 கப்
கிரீம்                                         – 3 டேபிள் ஸ்பூன்
முட்டை                                  – 2
சுடு தண்ணீர்                         – 1/2 கப்
ஜெலட்டின்                           – 11/2 டேபிள் ஸ்பூன்

 

ரிச் வெனிலா ஐஸ்கிரீம் வித் கேரமல் சாஸ் செய்முறை

 

முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். சுடு தண்ணீரை ஜெலட்டினில் ஊற்றி அது கரையும் வரை நன்றாகக் கலக்கவும். எல்லாப் பொருட்களையும் ஒரு பெரிய பௌலில் போட்டு திக்காகவும், கிரீமியாகவும் வரும் வரை கடையவும். பின் இக்கலவையை ஃப்ரிஸரில் வைக்கும் பாத்திரத்தில் மாற்றி ஃப்ரிஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து இக் கலவையை வெளியே எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்து விட்டு திரும்பவும். ஃப்ரிஸரில் வைக்கவும். ஐஸ்கிரீம் ரெடியானவுடன் கேரமல் சாஸீடன் பரிமாறவும்.
கேரமல் சாஸ் 1 கப் சர்க்கரையை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். கோல்டன் ப்ரவுன் ஆகும் வரை வறுக்கவும். பின் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். ஆற வைத்து கிரீம், நட்ஸ் சேர்த்து ஐஸ்கிரீமின் மேல் ஊற்றி பரிமாறவும்.

Post a Comment