ரிசார்ட்ஸ் புட்டு மட்டன் கறி

Loading...
Description:

div class=”separator” style=”clear: both; text-align: center;”>

தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி 500 கிராம்
மட்டன் கொழுப்பு 100 கிராம்
வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 2 ( விழுதாக அரைத்தது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)
கறிவேப்பில்ல 1 கொத்து
கொத்தமல்லி இலைகள் 1 ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க -1
சின்ன வெங்காயம் 8
பூண்டு பற்கள் 3
இஞ்சி 1 இன்ச்
வரமிளகாய் 2
குரு மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி

மசாலா அரைக்க-2
முந்திரி பருப்பு 15
கசாகசா 1/2 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி

தாளிக்க
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4

செய்முறை
1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்துகொள்ளவும். முதலாவது மசாலாவை அம்மிகல்லில் தான் அரைத்து கொள்ளவும். இல்லையென்றால் ( Stone Mortar ) வாங்கி அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள்( மட்டன் கொழுப்பை சேர்க்க கூடாது ) மற்றும் அரைத்த மசாலா கலவை , மஞ்சள் தூள், தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை விட்டுகோங்க.

3. அந்த சமயத்தில் இரண்டாவது மசாலாவை மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது வடைச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் மட்டன் கொழுப்பை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்பு அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

5. பிறகு அதில் சோம்பை சேர்த்து தாளிக்கவும் , அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பின்பு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. இப்பொழுது அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம்மசாலா தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பிரஷர் குக்கரில் உள்ள மட்டன் சாறை ஊற்றி 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

8. இந்த சமயத்துல அரைத்து வைத்துள்ள இரண்டாவது மசாலா கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த சமயத்தில் பிரஷர் குக்கரில் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து அதனுடன் தேவையான அளவு (குழம்பு உங்களுக்கு திக்காக எவ்வளவு வேண்டுமோ அதை வைத்து ) தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை அடுப்பை சிறுதீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

9. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

10. இந்த மட்டன் குழம்பை நான் அரிசி குழாய் புட்டுடன் உண்டு இரசித்தேன்.

Post a Comment