ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

Loading...
Description:

201605130654304439_How-to-make-ragi-semiya-vegetable-upma_SECVPF.gif

தேவையான பொருட்கள் :

ராகி சேமியா  – 200 கிராம்
நீர் – 1.5 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய்  – 2
கேரட் – 1
பீன்ஸ்   – 6
குடை மிளகாய்   – ½
உப்பு  – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை –  சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு  – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை  – ஒரு கொத்து

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

* பின்பு பச்சை மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் உப்பு சேர்த்து காய்கறிகளின் பச்சை வாசம் போகும் நன்கு கிளறவும்.

* காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ராகி சேமியா சேர்த்து சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும்.

* மிதமான தீயில் வேக வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும்

* வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

* சுவையான ராகி சேமியா உப்புமா ரெடி.

Post a Comment