ரவா பொங்கல்,arusuvai samayal recipes in tamil

Loading...
Description:

என்னென்ன தேவை?

ரவை – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 3.5 கப்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு

தாளிக்க…

நெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
முந்திரி – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் வறுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பருப்பு வெந்த பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக விடவும். ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பொங்கலில் அதை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Post a Comment