மோர் குழம்பு ரெசிபி

Loading...
Description:

28-curd-curry

தென்னிந்தியாவில் உகாதிக்கு செய்யப்படும் உணவுகளில் ஒன்று தான் மோர் குழம்பு. இந்த மோர் குழம்பு பெரும்பாலானோருக்கு பிடித்த குழம்பும் கூட. மேலும் இதனை செய்வது மிகவும் ஈஸி. சாதத்திற்கு அருமையான சைடு டிஷ்ஷூம் கூட. இங்கு மோர் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து பாருங்கள். உகாதி ஸ்பெஷல் மோர் குழம்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப்
வெள்ளை பூசணி – 1 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப் தாளிப்பதற்கு..
. கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு வெந்தயம், தண்ணீர் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை தயிரில் போட்டு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தயிரை ஊற்றி, அத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்த, 5-6 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கினால், மோர் குழம்பு ரெடி!!!

Post a Comment