மொறுமொறுப்பான இட்லி மாவு போண்டா

Loading...
Description:

201607071018201761_how-to-make-Crispy-And-Tasty-idli-maavu-bonda_SECVPF.gif

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் கலவை சற்று கெட்டியாக இருக்குமாறு போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* இட்லி மாவு போண்டா ரெடி!!!

Post a Comment