மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

Loading...
Description:

d3ee26db-4266-44ca-8cec-6016b0580470_S_secvpf.gif

தேவையான பொருட்கள் :

பைனாப்பிள் – 2 பெரிய துண்டு
மாம்பழம் – 1
தேன் – சுவைக்கு
புளிக்காத தயிர் – 1 கப்
கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை
சீரக தூள் – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை :

• ஒரு துண்டு மாம்பழம், ஒரு துண்டு பைனாபிளை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

• மாம்பழம், பைனாபிளை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.

• மிக்சியில் தயிர், கறுப்பு உப்பு, சீரகதூள், ஏலக்காய் தூள், தேன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

• பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழக்கலவையை ஊற்ற மீண்டும் ஒருமுறை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

• ஒரு கண்ணாடி கப்பில் இந்த மேங்கோ பைனாபிள் லஸ்ஸி ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள பைனாபிள், மாம்பழ துண்டுகள், ஐஸ் கியூப்ஸ், போட்டு பருகவும்.

• கோடை வெயிலுக்கு இந்த டிரிங் மிகவும் குளிர்ச்சியை தரும்.

Post a Comment