மூக்கு சரியா இல்லையே என்ற கவலையா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் –

Loading...
Description:

பெண்களை பார்த்தால் மூக்கும் முழியுமாக நல்ல லட்சணமாக இருக்கிறார் என்று சொல்வார்கள்.

முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும்.

ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை.

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும்.

* வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

* மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும்.

இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை திசு பேப்பரால் துடைத்து எடுத்துவிடுங்கள்.

இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும்.

* மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விடயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம்.

* மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம்.

காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும்.

* மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும்.

சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக தடவ வேண்டும்.

இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும்.

சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும்.

பொதுவாக இந்த வகை மேக்கப்பை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.
– See more at: http://www.lovepannunga.com/13886#sthash.Y5usAbVz.dpuf

Post a Comment