முருங்கை பெப்பர் சிக்கன்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:
Drumstick Pepper Chicken - Cooking Recipes in Tamil

மட்டன்ல முருங்கைக்காய் சேர்த்து சமைச்சிருக்கோம். ஆனா, எப்படி சிக்கன்லனு யோசிக்கிறீங்களா…. அட! ஆமாங்க…. சிக்கன்ல சேர்த்து சமைச்சு பாருங்க.. சும்மா சூப்பரா இருக்கும். பின்ன என்ன…இந்த சம்மருல வந்திருக்கும் விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுத்து அசத்திட வேண்டியதுதானே…….

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
முருங்கைக்காய் – 4
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு – 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் – 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6
கொத்தமல்லி இலை – 1 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Post a Comment