முருங்கைத் தண்டு சூப் tamil samayal

Loading...
Description:

முருங்கைத் தண்டு சூப் tamil samayalஎன்னென்ன தேவை?

முருங்கைக் கீரையின் தண்டுகள்,
காம்புகள் – 1 கைப்பிடி,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 6 பல்,
சின்ன வெங்காயம் – 4,
தக்காளி – 1,
மிளகு – அரை  டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

முருங்கைத் தண்டுகளையும் காம்புகளையும் இடிக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து இடித்து மிளகு, சீரகம், மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து, தக்காளி நறுக்கிப் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். வெந்ததும் விசிலை எடுத்துவிட்டு நன்கு கடையவும். பிறகு, 1 பங்கு  தண்ணீர் 1/4 பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து சாப்பிடவும்.

* வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டால் அதிகமாக சிறுநீர் பிரியும். உடலில் உள்ள கெட்டக் கழிவுகள் சிறுநீராக வெளியேறும். உடல் புத்துணர்ச்சி பெறும்.  ஊளைச் சதை தானாகக் குறையும்.

Post a Comment