முதலியார் ஸ்பெசல் நாட்டுக்கோழி அரைச்ச குழம்பு

Loading...
Description:

இந்த குழம்பை எனது சிறு வயது தோழி மற்றும் உறவினர் திருமதி.வனிதா அவர்கள் கோயமுத்தூர் வந்த போது அவரது வீட்டில் எங்கள் குடும்பத்தாருக்கு வைத்த விருந்து.

அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் கணிபொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த குழம்பு காரசாரமாக இருக்கும், இது சுடு சாதத்திற்கு ஏற்ற பக்க உணவாகும். சப்பாத்தி, பட்டூரா( சோளா பூரி ) போன்ற உணவுகளுக்கு சரியான பக்க உணவாகும்.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 1/2 கப்
கறிவேப்பிலை 3 கொத்து
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 3 ( விழுதாக நைசாக அரைத்து கொள்ளவும்)
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

மசாலா அரைக்க 1
இஞ்சி 2 இன்ச்
பூண்டு 5 பற்கள்
சோம்பு 2 மேஜைக்கரண்டி
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 4
கசாகசா 4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 10

மசாலா அரைக்க 2
மரசெக்கு கடலெண்ணய் 1 1/2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 15 ( பொடியாக நறுக்கியது )
வரமிளகாய் 4
கொத்தமல்லி 1 மேஜைக்கரண்டி
குரு மிளகு 1 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து

செய்முறை
1. முதலில் முதல் அட்டவணையில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து 1 1/2 மேஜைக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும்.

3. அதில் குரு மிளகு , வரமிளகாய், சீரகம் , கறிவேப்பிலை, கொத்தமல்லி விதை போட்டு நன்றாக 1 நிமிடம் சிறுதீயில் வறுக்கவும்.

4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். அடுப்புல இருந்து இறக்கி கொள்ளவும்.

5. பிறகு அந்த வடச்சட்டியில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் ஒட்டியுள்ள மசாலா வாடை மற்றும் சிறு பொருட்களை கரண்டி கொண்டு நன்றாக சுரண்டி கொள்ளவும். பிறகு நன்றாக தண்ணீரை ஆறவிடவும்.

6. இப்பொழுது மிக்ஸியில் நன்றாக வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்துள்ள மசாலா நீரை மிக்சியில் சேர்த்து அரைத்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

7. இப்பொழுது நாட்டுகோழியை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளவும்.

8. பிறகு பிரஷர் குக்கரில் நாட்டுக்கோழியை சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்துகோங்க , அதில் மஞ்சள் தூள் , பச்சை மிளகாய் விழுது , தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக 4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

9. பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி 3 விசில் வரை விட்டு இறக்கி வைக்கவும்.

10. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் , அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

11. இப்பொழுது வடச்சட்டியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

12. அதில் தனி தனியாக அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

13. இப்பொழுது வடச்சட்டியில் உள்ள நாட்டுக்கோழி சாற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் பிரஷர் குக்கரில் உள்ள வேகவைத்த நாட்டுகோழி கறியை சேர்த்து மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து நன்றாக சிறுதீயில் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

14. அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.

Post a Comment