முட்டை கொத்து பரோட்டா

Loading...
Description:

முட்டை கொத்து பரோட்டா

தேவையானப் பொருட்கள் :

பரோட்டா – 4 (உதிர்த்தது)
முட்டை – 3
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – தேவைக்கு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கறிமசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லித்தழை – 1/2 கப்
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

* வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.

* அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.

* பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி ஏதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.

* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.

* சுவையான கொத்து பரோட்டா தயார்.

Post a Comment