முட்டைக்கோஸ் பொரியல் tamil samayal ullaham

Loading...
Description:

muttaikose-poriyal212முட்டைக்கோஸ் பொரியல் தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ்                                      – 1/4 கிலோ
பெரிய வெங்காயம்                                 – 1
பச்சை மிளகாய்                                        – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை          – சிறிது
தேங்காய்த்துருவல்                               – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி                                           – 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு                                           – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்                                                  – 2 டீஸ்பூன்
கடுகு                                                             – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு                                      – 1/4 டீஸ்பூன்
உப்பு                                                              – தேவையான அளவு

 

முட்டைக்கோஸ் பொரியல் செய்முறை

 

துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸ், பெரிய வெங்காயம், கொத்தமல்லி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸை உப்பு, மஞ்சள் பொடி போட்டு அளவான தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், போட்டு வதக்கி பின் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த முட்டைக்கோஸ், துவரம் பருப்பு போட்டு, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Post a Comment