முகத்தில் கரும்புள்ளிகளா? கவலை வேண்டாம்

Loading...
Description:

dark-spots-on-face.

உங்கள் முகத்தில் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகள் உள்ளதா? அதை வேகமாக மறைக்க நினைக்கிறீர்களா?

அப்படியெனில் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகள் என்னவென்று தேடிப் பின்பற்றுங்கள்.

ஒருவரது முகத்தில் முகப்பரு, தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகள் அழகைக் கெடுக்கும் வண்ணம் இருக்கும். ஆனால் இவற்றை ஒரு சில எளிய நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் வேகமாக மறைக்கலாம்.

எலுமிச்சை

கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் எலுமிச்சை சாறை தடவும் போது முகத்தில் கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும், இதிலுள்ள சிட்ரிக் அமிலம் உதவிபுரிகிறது.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்யில் இயற்கையாகவே உள்ள எதிர் ஆக்சிஜனேற்றிகள் கரும்புள்ளிகளை மறைத்து தோலின் நிறத்தை அதிகரிக்கும்.

dark-spot-21

ஃபேஸ் பேக்

சந்தன பவுடர், கிளிசரின், தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல செய்யவும். இந்த பேக்கை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

வெங்காயம் மற்றும் பூண்டு சாறு

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாற்றை சம அளவில் கலக்கவும். இந்த சாற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, நறுமணம் போகும் வரை கழுவவும். கரும்புள்ளிகள் நீக்க இது ஒரு சிறந்த தீர்வாகும். தொடர்ந்து பயன்படுத்தினால் நாளடைவில் முன்னேற்றம் தெரியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்களால் இது ஒரு கரும்புள்ளி நீக்கியாக செயல்படுகிறது. தொடர்ந்து இந்த எண்ணெய்யை முகத்தில் தேய்த்து வர புள்ளிகள் குறைவதோடு மட்டுமல்லாமல் மறுபடியும் வருவதும் தடுக்கப்படுகிறது.

Post a Comment