மிளகு ரசம்

Loading...
Description:

மிளகு ரசம்தேவையான பொருட்கள் :

மிளகு – 1 1/2 தே.கரண்டி
புளி – 1 எலுமிச்சை பழம் அளவு
துவரம் பருப்பு – 3 தே. கரண்டி
தேங்காய்ப்பூ – 3 தே. கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – 1/2 தே. கரண்டி
பெருங்காயம் – கொஞ்சம்
கறிவேப்பிலை – கொஞ்சம்
மஞ்சத்தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தே. அளவு
எண்ணெய் – தே. அளவு

செய்முறை :

1. புளியை கரைத்துக் கொள்ளவும். அதோடு, உப்பு, மஞ்சத்தூள், பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
2. சட்டியில் லேசாக எண்ணெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, தேங்காய்ப்பூ இவற்றை வதக்கவும். பின்னர் அரைக்கவும்.
3. அரைத்த கலவையை கொதிக்கும் ரசத்‌தில் சேர்க்கவும் .
4. மற்றொரு சட்டியில் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதை யும் ரசத்‌தில் சேர்க்கவும். சுவையான மிளகு ரசம் ரெடி

Post a Comment