மில்டா சோமாஸ்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

Milda Samosa - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

சோமாஸ் பொரித்து எடுக்க எண்ணெய் – 1\2 லிட்டர்

சோமாஸ்ஸிற்கு வெளிமாவு தயார் செய்ய:

மைதா – 1\4 கிலோ
ரவை – 150 கிராம்
முட்டை – 1 (வெள்ளைக்கரு மட்டும்) நன்றாக அடித்து வைக்கவும். (முட்டை சாப்பிடாதவர்களுக்கு தேவையில்லை)
தேங்காய் – 1\2 முடி துருவி கட்டியான பால் 150 மி.லி.
ஏலக்காய் – 10 உரித்து அரைகுறையாக தூள் செய்தது
உப்பு – 2 சிட்டிகை

பூரணம் தயார் செய்ய:

பால் – 1\2 லிட்டர், நீர் சிறிதுமின்றி. கட்டியான கோவா காய்ச்சி நன்கு உதிர்த்து விடவும்.
தேங்காய் – 1\2 முடி துருவி நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
ரவை – 50 மி.லிட்டர் நெய் விட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஏலக்காய் – 5 நன்கு தூள் செய்யவும்.
முந்திரிப்பருப்பு – 25 கிராம் – பொடியாக வெட்டி நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
சினி – 100 கிராம் – (இனிப்பு தேவைக் கேற்றபடி)

செய்முறை:

மைதா, ரவையுடன் டால்டாவைக் கலந்து அத்துடன் ஏலப்பொடியையும் கலந்து நன்றாக ஒன்று சேரும் வரை பிசையவும். அடித்த முட்டையை விட்டு நன்றாக ஒன்று சேரும் வரை பிசையவும். தேங்காய் பாலுடன் உப்பு கலந்து மாவில் விட்டு நன்றாக மிருதுவாகும் வரை பிசைந்து ஒரு ஈரத்துணியில் குறைந்தது 1\2 மணி நேரம் சுற்றி வைக்கவும். நன்றாக ஊறியதும், ஒரு உருண்டை மாவு எடுத்து பலகையில் மெல்லியதாக விரித்து ஒரு வட்ட மூடியில் வெட்டி, நடுவில் பூரணத்தை வைத்து, மூடி, சோமாஸ் கரண்டியால் ஓரத்தை வெட்டவும் அல்லது தண்ணீர் வைத்து ஓரத்தை பிரியாதபடி ஒட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Post a Comment