:மாம்பழ ஐஸ்கிரீம்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

Mango Ice-cream - Cooking Recipes in Tamil

ஐஸ்கிரீம் என்றாலே உருகாத மனமும் உண்டோ? அதுவும் முக்கனியில் ஒன்றான மாம்பழம் வைத்து ஐஸ்கிரீம் என்றால் சொல்லவே வேண்டாம். மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டு சுவையான ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய மாம்பழம் – 2
குளிர்ந்த பால் – 1 கப்
வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1 கப்
ஜெல்லி – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத்துண்டங்களை சிறிது தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும். பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து கலந்து, அதனை மாம்பழச்சாறுடன் சேர்க்கவும். இதனை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும். அதன் பிறகு எடுத்து மேலே வெணிலா ஐஸ்க்ரீமை விட்டு பரிமாறவும்.

Post a Comment