மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் உஷ்த்ராசனம்

Loading...
Description:

16c608ef-ed26-4fc9-b7db-4c73af2e84dd_S_secvpf.gifசெய்முறை:

முழங்காலை பின்புறமாக மடக்கி, இடுப்பிற்குக் கீழே குதிகால்கள் சற்றே விரிந்த நிலையில் இருக்க அதன் மேல் உட்காரவும். உடல், முதுகெலும்பு, கழுத்து நேர் கோட்டில் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் அந்தந்த முழங்கால்களின் மேல் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது உட்கார்ந்திருக்கும் நிலையில் பின்புறமாக சாயவும். பிறகு வலது கணுக்காலை வலது கையிலும் இடது கணுக்காலை இடது கையிலும் பற்றவும். மூச்சுக்காற்றை உள்ளிழுக்கவும் மேலும் தொடர்ந்து கணுக்கால்களை பிடித்தவண்ணம், இடுப்புப் பகுதியையும், தொடைகளையும் இறுக்கவேண்டும்.

கழுத்தையும் தலையும் முடிந்த வரை வளைக்க வேண்டும். இடுப்பு‌ப்பகுதியை சற்றே முன்னால் தள்ளவும். சாதாரணமாக மூச்சு விட்டப்படி, இதே நிலையில் 6 முதல் 8 வினாடிகள் இருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.

இதனைச் செய்யும்போது கைகளை முதலில் விடுவிக்கவும். முட்டிகால் போட்டபடி உட்கார்ந்த நிலையில் உடலை இறுக்கவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முறை செய்ய வேண்டும்.

பயன்கள்:

கணுக்கால் தசைகளுக்கு இது ஒரு சிறந்த பயிற்சி. அதேபோல் தொடைகள், உடல், மார்பு, தொண்டை இடுப்பு மற்றும் அடிவயிறுப் பகுதிகளுக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக அமையும். கழுத்து மற்றும் அடிவயிற்று உறுப்புகளுக்கு புத்துணர்வூட்டும்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் இந்த ஆசனம் மூச்சுக்குழல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நுரையீரல், தொண்டை உள்ளுறுப்புகள், நாசிப் பாதைகள் மற்றும் நரம்புகளை முடுக்கிவிடும்.

நீண்ட நாளைய தலைவலி, தொண்டை உபாதைகள், அடி நாக்கு அழற்சி ஆகியவற்றை இந்த ஆசனம் குணப்படுத்தும். இந்த ஆசனத்தை தினசரி செய்து வந்தால் களைப்பு, மாதவிடாய் கால தொந்தரவுகள் மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றிலிருந்தும் விடுபடலாம்.

Post a Comment