மாடர்ன் மங்கையர் அணிய ஏற்ற புதிய துலிப் பேண்ட்கள்

Loading...
Description:

201608020906213450_tulip-pants-for-girls_SECVPF.gif

இளம்பெண்கள் அணிகின்ற நவீன ஆடைகள் என்பவை பிரத்யோக வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இவை அன்றைய கால டிரெண்ட் மற்றும் அணிய லகுவான வடிவுடன் உருவாக்கப்படுகின்றது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அலுவலகம், கல்லூரி மற்றும் வெளி பணிகள் என்றவாறு நாளும் புதிய புதிய ஆடைகளை அணிய வேண்டியதில்லை.

அதற்கேற்ப ஆடைகள் தனித்தனி சிறப்பு வடிவமைப்பு டிசைன், பேட்டர்ன், வண்ணங்கள் கொண்டவாறு வலம் வருகின்றன. நவீன யுக்திகள் மாடர்ன் மங்கையர் அணியக்கூடிய ஆடைகளான சுடிதார், பைஜாமா, ரசகளி போன்ற ஆடைகளுக்கு ஏற்ற பேன்ட்கள் தனிப்பட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகிறது.

மேல் சட்டை அமைப்புக்கு ஏற்ற பிரதான பேண்ட் வகைகள் முன்பு ஒரே மாதிரியாக இருந்தன. இன்று லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், பலகோ, ஜெக்கிங்ஸ் போன்றவை வந்துள்ளன. குர்தீஸ் மற்றும் குர்தா அணிவதற்கேற்ற பேண்ட் வகையில் லெக்கின்ஸ் என்ற உடலோடு ஒட்டிகொள்ள கூடிய பேண்ட் தற்போது முதலிடம் பிடிக்கின்றது.

அதுபோல் லாங் சுடிதார், பேன்ஸி சுடிதார் போன்றவைகளுக்கு பேண்ட் என்பது குறுகிய கால் பகுதியும், அகலமான மேற்பகுதியும் கொண்ட பேண்ட்கள் தயாரிக்கப்படுகிறது. மேல்சட்டையில் செய்யப்படும் டிசைன் பார்டர் கால்பகுதியில் பார்டர் ஆக வடிவமைக்கப்படுகிறது.

இறுக்கமான பேண்ட்களுக்கு மாற்றான பலசோ பேண்ட்கள்

இறுக்கமான வகையில் உருவான பேண்ட்களுக்கு மாற்றாக வித்தியாசமான வடிவில் தளர்ந்த வகையிலான ஆடையாக பலசோ பேண்ட்கள் அறிமுகமாயின. இவை அணிய சுலபமானது எந்த பயணத்திற்கும், விழாக்களுக்கும் அணிய ஏற்றவாறு வித்தியாசமான வடிவமைப்பு, வண்ண கலவையுடன் உருவாக்கப்படுகிறது. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அலகமான விரிந்த பேண்ட்கள் அமைப்பு. முந்தையகால அகல பேண்ட் அமைப்பில் சில வித்தியாசங்கள் மட்டும் செய்யப்பட்டு நவீன மங்கையர் அணிய ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பூ டிசைன், ஜியோ மெட்ரிக் பேட்டர்ன் முதலிடத்தை பிடிக்கிறது.

புத்தம் புதிய துலிப் பேண்ட்கள்:-

ஆண்டிற்கு ஓர் பேண்ட் வகை அறிமுகமாவது உண்டு. இந்த ஆண்டின் அறிமுகம் துலிப் பேண்ட். அழகிய மேல்சட்டைக்கு ஏற்ற அதே வண்ணம் மற்றும் மாறுபட்ட வண்ண கலவையுடன் துலிப் பேண்ட்கள் உருவாகின்றன. துலிப் பேண்ட்கள் மற்ற பேண்ட்களை விட மாறுபட்ட வடிவமைப்பு, அணிய ஏற்ற சுலபமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் விழாக்காலத்திற்கு பெண்கள் விரும்பி வாங்கி அணியும் பேண்ட் வகையாக துலிப் சிறந்த இடம் பிடிக்கும் என நம்பலாம்.

வித்தியாசமான புதிய வடிவமைப்பில் துலிப் பேண்ட்கள்:-

பார்க்க பஞ்சகஞ்ச வேஷ்டி அமைப்பிலான இந்த பேண்ட் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கணுக்கால் நீண்ட பேண்ட் அமைப்பில் இருந்து மாறுபட்ட கணுக்கால் மேல் பகுதியுடன் பேண்ட் முடிவடைந்து விடும். இந்த பேண்ட் கீழ்பகுதி முக்கோண வடிவில் வெட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் காலி பகுதி முதல் கீழ் கால் பகுதி வரை சுருக்கம் சுருக்கமாய் இணைப்பு செய்யப்பட்டன. கணுக்கால் பட்டை பகுதியில் மேல்சட்டையின் அதே பார்டர் அல்லது மணிகள், லேஸ் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இந்த பேண்ட்டிற்கு ஏற்ற மேல் சட்டை என்பது தொடை பகுதி வரை நீண்ட குர்தீஸ் மற்றும் குர்தாக்கள் பொருத்தமானது.

துலிப் பேண்ட்கள் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களில் தான் உருவாக்கப்படுகிறது. இளம் பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், லைட்ப்ளூ போன்ற வண்ணங்களும் அதன் மேற்புறம் பேட்ச் மற்றும் எம்பிராய்டரி செய்யப்படும் பேண்ட்கள் கிடைக்கின்றன. துலிப் பேண்ட்கள் பெண்கள் கணுக்கால் அழகை பொலிவுடன் வெளிபடுத்தும் விதமான தனித்துவத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment