மஷ்ரூம் கோஸ் ஃப்ரை,Tamil Recipe Cooking Methods,tamil samayal kuripu,cooking tips tamil

Loading...
Description:
 • மஷ்ரூம் – 100 கிராம்
 • கோஸ் – 100 கிராம்
 • வெங்காயம் – ஒன்று
 • பச்சை மிளகாய் – 2
 • பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
 • சோம்புத் தூள் – அரை தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
 • மிளகு, சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
 • தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
 • எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
 • உப்பு – தேவைக்கு

 

 

மஷ்ரூம் மற்றும் கோஸை நறுக்கி உப்பு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் மஷ்ரூம், கோஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு தூள் வகைகள் சேர்க்கவும். தண்ணீர் விடாமல் மஷ்ரூம் சுருள வேகும் வரை வேகவிட்டு, கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

எளிமையாகச் செய்யகூடிய மஷ்ரூம் கோஸ் ஃப்ரை தயார்.

Post a Comment