மல்லிகைப்பூ இட்லி

Loading...
Description:

இந்த வகை இட்லி ஏலகிரி மலையில் மிகவும் பிரபலம் இதனுடன் வேர்கடலை, தேங்காய், வரமிளகாய் சட்னியுடன் சாப்பிட நன்றாக சுவையாக இருக்கும்.

இந்த இட்லி மிகவும் பிரபலமானது ஏஜிஎஸ் ஆலீடே ரிசார்ட்ஸ் ல் நாட்டுக்கோழி குழம்பு உடன் சுடச்சுட சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

ஜவ்வரிசி யில் நைலான் வகையை பயன்படுத்த கூடாது.

அது போல் பயன்படுத்தி னால் இட்லி பஞ்சு போல் இருக்கும்.

தேவையான பொருட்கள்
புழுங்கல் இட்லி அரிசி 3 கப்
உளுந்து பருப்பு 1 கப்
ஜவ்வரிசி 3/4 கப்
உப்புத்தூள் 1 மேஜைக்கரண்டி
ஆப்பசோடா 1 தேக்கரண்டி

செய்முறை

1. புழுங்கல் அரிசி , உளுந்து, ஜவ்வரிசி போன்ற பொருட்களை ஒவ்வொன்றாக தனி தனியாக நன்றாக இரவு முதல் காலை வரை ஊற வைத்து கொள்ள வேண்டும்.

2. நன்றாக ஊற வைத்துள்ள ஜவ்வரிசி யை மிக்ஸியில் சேர்த்து நன்றாக மையமாக நைசாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது நன்றாக ஊறவைத்துள்ள உளுந்தை கிரைண்டரில் சேர்த்துகோங்க அதனுடன் 1 கப் ஐஸ் தண்ணீரை சேர்த்துகோங்க நன்றாக நுரைக்க நுரைக்க மையாக விழுதாக நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

4. அதன் பிறகு நன்றாக ஊறவைத்துள்ள அரிசியை 1 கப் தண்ணீர்சேர்த்துகோங்க நன்றாக நைசாக மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

5. அதில் உப்புத்தூள் சேர்த்துகோங்க அதனுடன் அனைத்து மாவையும் கை கொண்டு நன்றாக கலக்கி வைத்து கொள்ள வேண்டும்.

6. இந்த மாவை குறைந்தது 10 மணிநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

7. அதன் பிறகு அதில் ஆப்பசோடா மாவை கலந்து அதில் இட்லி பாத்திரத்துல இட்லி தட்டில் ஊற்றி மூடியை மூடி 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து கொள்ள வேண்டும்.

8. பிறகு எடுத்து சுடச்சுட சுவையான பிரமாதமான பஞ்சு போன்ற இட்லியை பரிமாறவும்.

Post a Comment