மலை சீனாபுரம் நாட்டுக்கோழி குழம்பு

Loading...
Description:

இந்த கிராமம் பெருந்துறையில் இருந்து திங்களூர் செல்லும் பாதையில் உள்ளது.

இந்த கிராமத்தில் முத்துகுமார்சுவாமி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக நடைபெறும். அந்த சமயத்தில் எனது சின்ன பாட்டி வீட்டில் செய்யும் நாட்டுக்கோழி குழம்பு சுவைக்கு தனியான ஒரு அச்சாரம் உள்ளது.

அடுத்த படியாக கிடா வெட்டி வைக்கும் விருந்தே மிகவும் பிரபலம்.

இந்த நாட்டுக்கோழி குழம்பை நீங்கள் இரும்பு வடச்சட்டியில் செய்து பாருங்கள்.

இந்த குழம்புடன் சுடு சாதம் , இட்லி, தோசை, சப்பாத்தி , ஆப்பம் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
சின்ன வெங்காயம் 18 ( அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் 5 ( பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் 1 மேஜைக்கரண்டி
தயிர் 1 கப்

மசாலா அரைக்க
கொத்தமல்லி விதைகள் 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
கிராம்பு 3
பட்டை 1 இன்ச்
கசாகசா 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 15

செய்முறை
1. வடசட்டியில் அடுப்புல வைத்து அதில் துளிகூட எண்ணெய் விடாமல் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது மிக்ஸியில் ஆறவைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது பிரஷர் குக்கரில் நன்றாக சுத்தமாக கழுவி நாட்டுக்கோழி துண்டங்களை சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், மற்றும் தேவையான உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக இரண்டு விசில் வரை விட்டுகோங்க.

4. பிறகு ஒரு கெனமான பாத்திரத்தை அடுப்புல வைத்து அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

6. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. இச்சமயத்துல பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதனுள் இருக்கும் நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

8. பிறகு அதில் பொடியாக அரைத்து வைத்துள்ளதை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

9. அதில் பிரஷர் குக்கரில் உள்ள நாட்டுகோழி சாறை சேர்த்துகோங்க 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

10. பிறகென்ன அதில் நன்றாக அடித்து வைத்துள்ள கெட்டி தயிரை சேர்த்துகோங்க நன்றாக 5 நிமிடங்கள் வரை கிளறவும்.

11. இப்பொழுது குழம்பு நமக்கு ஏற்றவாறு கெட்டி தன்மையாக ஆனதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

12. இப்பொழுது சுடச்சுட சுவையான பிரமாதமான எங்கள் ஆத்தாவின் கைமணத்தில் காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

Post a Comment