மரவள்ளி கிழங்கு தோசை

Loading...
Description:

13407225_1032123440168045_924746978156254030_n


இத் தோசை தஞ்சை இசை கலைஞர் சமுதாயத்தின் மிகவும் பிரியப்பட்ட உணவு. ஆனால் இன்று இவ்வகை உணவு தஞ்சையில் பெரும்பாலும் அனைத்து சமுகத்தினரும் செய்து சாப்பிடும் உணவு.

நான் எனது பிரியமான நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறபட்டவை.

தேவையான பொருட்கள்
மரவள்ளி கிழங்கு 1 1/2 கப்
இட்லி அரிசி 1/2 கப்
பச்சை அரிசி 1/2 கப்
கடலை பருப்பு 1/4 கப்
துவரை பருப்பு 1/4 கப்
வரமிளகாய் 8
சின்ன வெங்காயம் 1/2 கப்
இஞ்சி 1 இன்ச்
சீரகம் 2 தேக்கரண்டி
பழைய சாதம் 2 கைப்பிடி
பூண்டு 10 பற்கள்
மிளகு 2 தேக்கரண்டி
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

தாளிப்பு
உளுத்தம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 2 மேஜைக்கரண்டி

செய்முறை

1. இட்லி அரிசி பச்சை அரிசி துவரை பருப்பு கடலை பருப்பு வரமிளகாய் தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

2. ஊறவைத்ததை கிரைண்டரில் பழைய சாதத்துடன் இட்டு மாவு அரைக்கவும்.

3. மிக்சியில் மரவள்ளி கிழங்கு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு , சீரகம், மிளகு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

4. பின்னர் தேங்காய் துருவலை, கொத்தமல்லி இலைகள் , கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

5. இப்பொழுது மரவள்ளி கிழங்கு கலவையை மாவு கரைசலுடன் கலக்கி புளிக்க வைக்கவும்.

6. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். தாளித்த பொருட்களை வடச்சட்டியில் இட்டு தாளித்து மாவு கரைசலில் சேர்க்கவும்.

6. தோசையாக வார்த்து பரிமாறவும்

Post a Comment